Primary Menu

Top Menu

ஜி7 மாநாட்டில் ரஸ்யாவும் பங்கேற்க வேண்டும் டிரம்ப் வலியுறுத்து..!!!

ஜி 7 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும், கூட்டமைப்பிலுள்ள பிற நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கனடா, அமெரிக்கா, பிரித்தானியா பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளடக்கிய ஜி7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக் மாநிலமான லமாவ்பே நகரில் நடைபெற்றுள்ளது.

 

ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதியான டொனாள்ட் டிரம்ப் குறித்த மாநாட்டில் ரஸ்யாவையும் பங்கேற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் ரஷ்யா குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும் என தெரிவித்த டொனாள்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கும் அதனை அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில் ட்ரம்பின் கருத்தை ஜெர்மனி ஜனாதிபதி; ஏஞ்சலினா மார்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஜி7 மாநாட்டில் பிற நாடுகளின் மீது அமெரிக்கா வர்த்தக தடைகளை விதித்துள்ளமை தொடர்பாக டிரம்புக்கும், பிற நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் பூ ஆசிரியர்

Leave a Reply