Primary Menu

Top Menu

முக்கியமான நிகழ்வுகளில் பாம்பை காணும் சி.வி.விக்னேஸ்வரன்!! காணாவிட்டால் கவலை என்கிறார்..!!

பாம்பை கண்டால் தனக்கு நல்ல சகுணமாகும், காணாவிட்டால் அது மோசமான சகுணமாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் அன்னதான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவத்துள்ளார்.

தனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தன்னுடைய வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ள சந்தர்ப்பங்களில் எல்லாம் பாம்பொன்று தனது வீட்டிற்குள் வந்து போவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் மற்றும் பதவி உயர்வுகளின் போது , இவ்வாறு பல தடவைகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றவிருந்த சமயத்தில் தான் பாம்பை காணவில்லை எனவும்

இதனால் மனம் சற்று சஞ்சலமாகவே காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

பரீட்சைக்குத் தோற்றவிருந்த அந்த சமயத்தில் தமது தந்தையார் இறந்துவிட்டார் ஆகையால் பரீட்சைக்குத் தோற்றமுடியவில்லை.

இவ்வாறு இதுவரைக்காலம் முக்கிய நிகழ்வுகளின் போது பாம்பு வீட்டிற்கு வந்துப் போவது வழக்கமாகும் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் பூ ஆசிரியர்

Leave a Reply