Primary Menu

Top Menu

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியின் 25 மாணவர்கள் மீது வழக்கு..!!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியின் மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று இந்த முறைப்பாட்டினை கல்லூரி அதிபர் ஞானசம்பந்தர் வழங்கியுள்ளார்.

பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாக கடந்த வாரம் மாணவர்கள் போராட்டம் நடாத்தினார்கள்.

அந்த போராட்டத்தின் பின்னர் இரு மாணவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீண்டும் போராட்டத்தினை முன்னெடுத்த மாணவர்கள் 25 பேர் மீதே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டில் பாடசாலையின் ஒழுக்க நெறிகளை மீறி மாணவர்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு செயற்படும் அந்த 25 மாணவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், 25 மாணவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகள் முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் பூ ஆசிரியர்

Leave a Reply