Primary Menu

Top Menu

மன்னாரில் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் முழுமையான மனித எலும்புகூடு மீட்பு..!!

மன்னார் மாவட்டத்தின் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் முழுமையான மனித எலும்புகூடு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது

சதொச விற்பனை நிலைய வளாகத்தில அகழ்வு பணிகள் தொடர்ந்து நேற்று மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது

முன்னர் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்று 12 வது நாளாக அகழ்வுப்பணி நடைபெற்ற போதே முழுமையான மனித எலும்புகூடு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது

முழுமையான மனித எலும்புகூடு ஒன்று மீட்க்கப்பட்ட விடயமறிந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதியை நேற்று மாலை வேளையில சூழ்ந்து கொண்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது.

நேற்றைய அகழ்வு பணியின் போது முழுமையான மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்றைய அகழ்வு பணிகளை பார்வையிட்டு சென்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் நுற்றுக்கணக்கான மக்கள் அகழ்வு பணிகள் இடம் பெறும் இடத்தை சூழ்ந்து கொண்டதோடு, முழுமையாக மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகளை பார்க்க எத்தனித்தனர்.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கூடி நின்ற மக்களை பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றி நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 13ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பூ ஆசிரியர்

Leave a Reply