Menu

இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க துடிக்கும் சவுதி!!!


இந்தியா- பாகிஸ்தான் இடையில், நிலவும் பதற்றத்தைக் குறைப்பதே தமது நோக்கம் என சவுதி தெரிவித்துள்ளது.


புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் சூழல் நிலவி வருகிறது.


இதனால் பாகிஸ்தானுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்த சவுதி இளவரசர் பின் சல்மான் மூன்று நாள் தாமதத்துக்குப் பிறகு பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.


இரு தலைவர்களின் சந்திப்பில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


அத்துடன், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உதவித்தொகை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன.


புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகள் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்முத்தை ஆலோசனை நடத்துவதற்காக பாகிஸ்தான், அழைத்துள்ளது.


இந்த நிலையில் இதுகுறித்து இஸ்லமாபாத்தில் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல் ஜுபைர் கூறும்போது,


இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்றும், இரண்டு அண்டை நாடுகளில், நிலவும் வேறுபாட்டை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் பாதையை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்தியா- பாகிஸ்தான் இடையே புல்வாமா தாக்குதல் தொடர்பாக, பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து சீனா செல்லும் சவுதி இளவரசரின் பயணம் வெள்ளிக்கிழமை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது   ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பிரசல்ஸில் இடம்பெற்ற 22வது கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது   2018 இன் பிற்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிநிலையின் போது ஜனநாயக கட்டமைப்புகள் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை கருத்தில்கொண்டு இலங்கையில் நல்லாட்சி மனித உரிமைகள் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தனது முழுமையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   இந்த சந்தப்பில் மனித உரிமைகளும் நல்லிணக்கமுமே முக்கியமான நிகழ்ச்சி நிரலாக காணப்பட்ட இந்த இரு விடயங்கள் குறித்து தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது என இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சட்டமூலம் குறித்து ஆராயப்பட்டு வருவதை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச தராதரத்திலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தற்போதைய சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அனைத்து சூழ்நிலையிலும் மரணதண்டனையை பயன்படுத்துவதற்கும் ஐரோப்பிய ஓன்றியம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது