Menu

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி கைது!!


மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல் யாமீன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார்.


கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தேர்தலில் அப்துல்லா யாமீன்தோல்வி அடைந்தார்.


தேர்தலின்போது சட்ட விரோதமாக 10 கோடி பணம் பெற்றதாக அப்துல்லா யாமீன் மீது குற்றம் சாட்டப்பட்டது.


அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.


இந்த நிலையில் அப்துல்லா யாமீன் நேற்று கைது செய்யப்பட்டு, தலைநகர் மாலேவில் அருகே யுள்ள தூனிட்கோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாமீனுக்கு 15 வருட சிறைத் தண்டணையும், மோசடி செய்த பணத்தை விட 3 மடங்கு அபராத தொகையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


மாலைதீவில் உள்ள யாமீனின் வங்கி கணக்குகளையும் 45 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது   ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பிரசல்ஸில் இடம்பெற்ற 22வது கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது   2018 இன் பிற்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிநிலையின் போது ஜனநாயக கட்டமைப்புகள் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை கருத்தில்கொண்டு இலங்கையில் நல்லாட்சி மனித உரிமைகள் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தனது முழுமையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   இந்த சந்தப்பில் மனித உரிமைகளும் நல்லிணக்கமுமே முக்கியமான நிகழ்ச்சி நிரலாக காணப்பட்ட இந்த இரு விடயங்கள் குறித்து தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது என இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சட்டமூலம் குறித்து ஆராயப்பட்டு வருவதை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச தராதரத்திலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தற்போதைய சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அனைத்து சூழ்நிலையிலும் மரணதண்டனையை பயன்படுத்துவதற்கும் ஐரோப்பிய ஓன்றியம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது