Menu

விராட் கோலியை சமாளிக்க தயாராகும் ஆரோன் பின்ச்!!!


இந்திய அணியுடனான ஒருநாள், டி20 தொடர்களில் விராட் கோலி அணியை சமாளிக்க தெளிவான செயல்திட்டம் உள்ளதாக அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள், டி20 தொடர்களில் கோலி அணியை வெல்வதற்கு தெளிவான செயல்திட்டத்துடன் உள்ளதாக தெரிவித்த ஆரோன் பின்ச் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் போது சற்று கவனத்துடன் ஆட வேண்டும் என்றும, சிறிதளவு தவறினாலும், தங்கள் அணி தான் பாதிக்கப்படும் என அவுஸ்ரேலிய அணி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்ளூர் சூழலில் இந்திய அணி ஒருநாள் ஆட்டங்களில் சிறந்த அணியாக விளங்குகின்றமையால், முழு நம்பிக்கையுடனும் தெளிவான ஆட்ட உத்தியை வகுத்துள்ளதாக பின்ச் தெரிவித்துள்ளார்.


வரும் 24 ஆம் திகதி விசாகப்பட்டினத்தில் முதல் டி20 ஆட்டம் தொடங்குகிறது.


இரண்டாம் டி20 ஆட்டம் பெங்களூருவில் 27-ஆம் திகதி நடைபெறவுள்ளது.


5 ஒரு நாள் ஆட்டங்கள் வரும் மார்ச் 2-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கி, பின்னர் நாக்பூர், ராஞ்சி, மொஹாலி, டில்லியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

இலங்கையில் தற்போது உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை அமுல்படுத்தவேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்துகின்றது   ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பிரசல்ஸில் இடம்பெற்ற 22வது கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது   2018 இன் பிற்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட அரசியல் நெருக்கடிநிலையின் போது ஜனநாயக கட்டமைப்புகள் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டை கருத்தில்கொண்டு இலங்கையில் நல்லாட்சி மனித உரிமைகள் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தனது முழுமையான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   இந்த சந்தப்பில் மனித உரிமைகளும் நல்லிணக்கமுமே முக்கியமான நிகழ்ச்சி நிரலாக காணப்பட்ட இந்த இரு விடயங்கள் குறித்து தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது என இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சட்டமூலம் குறித்து ஆராயப்பட்டு வருவதை ஏற்றுக்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச தராதரத்திலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தற்போதைய சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அனைத்து சூழ்நிலையிலும் மரணதண்டனையை பயன்படுத்துவதற்கும் ஐரோப்பிய ஓன்றியம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது